காலநிலை மாற்றத்தில் அல்பீடோ விளைவு |Albedo effect on climate change
காலநிலை மாற்றத்தில் அல்பீடோ விளைவு |Albedo effect on climate change சுற்றுச்சூழல் அறிவியல் புவி வெப்ப உயர்வு நாம் வெயில் காலத்தில் வெப்பத்தின் தாக்கத்தைக் குறைக்க வெளிர் நிற ஆடைகளை அணிகிறோம். ஏனென்றால் வெளிர் நிற ஆடைகள் அதிக அல்பீடோ மதிப்பைக் கொண்டிருக்கும். அல்பீடோ என்றால் என்ன?. அல்பீடோ என்றால் லத்தீனில் வெண்மை என்று பொருள். அல்பீடோ மதிப்பு என்பது வெளியில் ஒரு பொருளின் பிரதிபலிக்கும்/ எதிரொளிக்கும் திறனைக் குறிக்கிறது. அதாவது ஒரு பொருள் எந்த அளவிற்கு சூரிய ஒளிக்கதிரை பிரதிபலிக்கிறது, எந்த அளவு உட்கிரகிக்கிறது என்பதைக் குறிக்கும். இதன் மதிப்பு பூஜ்ஜியத்திலிருந்து ஒன்று வரை இருக்கும். ஒரு சிறந்த எதிரொளிக்கும் தளத்தின் அல்பீடோ மதிப்பு 1. முழுக் கரும் பொருளின் அல்பீடோ மதிப்பு 0. இயற்கையில் யாவும் கருப்பு, வெள்ளையாக மட்டும் இல்லையே. அதனால் அவற்றின் அல்பிடோ மதிப்பு 0விலிருந்து 1 வரை வேறுபட்ட பல மதிப்புகளைக் கொண்டிருக்கும். பூமியின் அல்பீடோ விளைவு, புவிப்பரப்பின் எதிரொளிக்கும் திறன் அதன் காலநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். புவிப்பரப்பின் எதிரொளிப்பு திறன் குறையும் போது, சூரியனிலிரு